புனித சூசையப்பர் மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாக கேட்டருளும்
***எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித மரியாவே, ***
புனித சூசையப்பரே,
தாவீது அரசரின் புகழ்பெற்ற மைந்தரே,
முதுபெரும் தந்தையரின் மகிமையே,
இறையன்னையின் கணவரே,
கன்னிமரியாவின் கற்புள்ள காவலரே,
இறைமகனை வளர்த்த தந்தையே,
கிறிஸ்துவை ஆர்வப்பற்றுதலுடன் காப்பாற்றினவரே.
திருக்குடும்பத்தின் தலைவரே,
உத்தம நீதிமானான புனித சூசையப்பரே,
உத்தம துறவியான புனித சூசையப்பரே,
உத்தம விவேகம் கொண்ட புனித சூசையப்பரே,
உத்தம துணிவு கொண்டவரான புனித சூசையப்பரே,
பொறுமையின் கண்ணாடியே,*
வறுமையின் அன்பரே,
தொழிலாளிகளுக்கு மாதிரிகையே,
இல்லற வாழ்க்கையின் அணிகலனே,
கன்னியர்களின் காவலரே,
குடும்பங்களுக்கு ஆதரவே,
துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலே
நோயாளிகளுக்கு நம்பிக்கையே,
இறப்பவர்களுக்குப் பாதுகாவலரே,
பசாசுகளை நடுங்கச் செய்பவரே,
புனிதத் திருச்சபையின் பரிபாலகரே,
உலகின் பாவங்களைப் போக்குகிற இறைவனின் செம்மறியே,
எங்கள் பாவங்களை போக்கியருளும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்களை மீட்டருளும்
மு - ஆண்டவர் அவரைத் தமது வீட்டிற்குத் தலைவராக ஏற்படுத்தினார்.
து - தம்முடைய உடைமைக் கெல்லாம் அதிகாரியாகவும்
ஏற்படுத்தினார்.
செபிப்போமாக
எல்லாம் வல்ல இறைவா, அனைவருக்கும் மீட்பராகிய இயேசுவைப் புனித சூசையப்பரின் பொறுப்புமிக்க அருட்காவலில் ஒப்படைத்து, உம் திருமகனின் மீட்புப் பணியில் அவருக்குப் பங்களித்தீரே; புனித சூசையப்பரின் வழிகாட்டுதலாலும் வேண்டுதலாலும், உமது திருச்சபை உலகில் அந்த மீட்புப் பணியைத் தொடர்ந்தாற்றச் செய்தருளும். ங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
Comments
Post a Comment