புனித சூசையப்பர் மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே இரக்கமாயிரும் ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாக கேட்டருளும் ***எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித மரியாவே, *** புனித சூசையப்பரே, தாவீது அரசரின் புகழ்பெற்ற மைந்தரே, முதுபெரும் தந்தையரின் மகிமையே, இறையன்னையின் கணவரே, கன்னிமரியாவின் கற்புள்ள காவலரே, இறைமகனை வளர்த்த தந்தையே, கிறிஸ்துவை ஆர்வப்பற்றுதலுடன் காப்பாற்றினவரே. திருக்குடும்பத்தின் தலைவரே, உத்தம நீதிமானான புனித சூசையப்பரே, உத்தம துறவியான புனித சூசையப்பரே, உத்தம விவேகம் கொண்ட புனித சூசையப்பரே, உத்தம துணிவு கொண்டவரான புனித சூசையப்பரே, பொறுமையின் கண்ணாடியே,* வறுமையின் அன்பரே, தொழிலாளிகளுக்கு மாதிரிகையே, இல்லற வாழ்க்கையின் அணிகலனே, கன்னியர்களின் காவலரே, குடும்பங்களுக்கு ஆதரவே, துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலே நோயாளிகளுக்கு நம்பிக்கையே, இறப்பவர்களுக்குப் பாதுகாவலரே, பசாசுகளை நடுங்கச் செய்பவரே, புனிதத் திருச்சபையின் பரிபாலகரே, உலகின் பாவங்களைப் போக்குகிற இறைவனின் செம்மறியே, எங்கள் பாவங்களை போக்கியருளும். உலகின் பாவங்களைப் போக்க...