புனித சூசையப்பரின்ஏழு வியாகுலங்களையும் ஏழு மகிழ்ச்சிகளையும்குறித்துக் கேட்கும் மன்றாட்டு

1. புனித சூசையப்பரே! நீர் கன்னிமரியாவின் தாய்மைக்குத் காரணமறியாமல் பட்ட துரயத்தைப் பற்றி மனமிரங்குகிறேன். மேலும் காரணத்தை வானத்தூதரினால் அறிந்து நீர் அனுபவித்த மகிழ்ச்சியைப் பற்றிக் களிகூருகிறேன்.

புனித சூசையப்பரே! நீர் அனுபவித்த இந்தத் துயரத்தையும், மகிழ்ச்சியையும் பார்த்து எங்களுக்காகப் பரிந்துரைத்தருளும். (அல்லது தனக்கு வேண்டியதைக் கேட்கிறது).
- பர. அருள். திரி. 

2. புனித சூசையப்பரே! இயேசு மாட்டுக் கொட்டிலிற் பிறந்ததைக் கண்டு நீர் பட்ட துயரத்தைப் பற்றி மனமிரங்குகிறேன். மேலும் அவர் வானத்தூதர்களாலும் மனிதர்களாலும் தொழப்பட்டதைக் கண்டு நீர் அனுபவித்த மகிழ்ச்சியைப் பற்றிக் களிகூருகிறேன்.

புனித சூசையப்பரே! நீர்.......     
 - பர, அருள்., திரி.  

3. புனித சூசையப்பரே! திவ்விய குழந்தை விருத்தசேதனம் பெற்றதைக் கண்டு நீர் பட்ட துயரத்தைப்பற்றி மனமிரங்குகிறேன். மேலும் அவருக்கு இயேசுவென்னும் திருப்பெயர் அளிக்கப்பட்டதைக் கண்டு நீர் அனுபவித்த மகிழ்ச்சியைப் பற்றிக் களிகூருகிறேன்.

புனித சூசையப்பரே! நீர்......
பர., அருள், திரி.

4. புனித சூசையப்பரே! திவ்விய மைந்தனுடைய பாடுகளையும் அவருடைய திருத்தாயாருடைய வியாகுலங்களையும் சிமியோன் முன்னறிவிக்கக் கேட்டு நீர் பட்ட துயரத்தைப் பற்றி மனமிரங்குகிறேன். மேலும் மனுக்குலத்தின் மீட்பை அவர் முன்னறிவிக்கக் கேட்டு நீர் அனுபவித்த மகிழ்ச்சியைப் பற்றிக் களிகூருகிறேன். 

புனித சூசையப்பரே! நீர்....
 -பர., அருள், திரி. 

5. புனித சூசையப்பரே! நீர் எகிப்துக்கு ஓடிப்போனதைப்பற்றி மனமிரங்குகிறேன். மேலும் நீர் திவ்விய இரட்சகரைக் காப்பாற்றினதைப் பற்றிக் களிகூருகிறேன். 

புனித சூசையப்பரே! நீர்....
 -பர., அருள், திரி. 

6. புனித சூசையப்பரே! எகிப்தினின்று திரும்பி வருகையில், நீர் கொண்ட அச்சத்தைப் பற்றி மனமிரங்குகிறேன். மேலும் வானத்தூதரின் காட்சியால் தேறுதலடைந்ததைப் பற்றிக் களிகூருகிறேன்.

புனித சூசையப்பரே! நீர்.....
 -பர., அருள், திரி. 

7. புனித சூசையப்பரே! இயேசு காணாமற் போனதினால் நீர் பட்ட துயரத்தைப் பற்றி மனமிரங்குகிறேன். மேலும் அவரை மறுபடியும் கண்டு நீர் கொண்ட மகிழ்ச்சியைப் பற்றிக் களிகூருகிறேன்.

புனித சூசையப்பரே! நீர்....
- பர. அருள்., திரி.


மு - கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி, 
து - புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக

எல்லாம் வல்ல இறைவா, சொல்லற்கரிய உமது
பராமரிப்பினால் நீதிமானாகிய புனித சூசையப்பரை உம் திருமகனின் தூய அன்னைக்குக் கணவராகத் தேர்ந்தெடுக்கத் திருவுளமானீர். உம்மிடம் அவர் எங்களுக்காகப் பரிந்து பேசுவதால், இவ்வுலகில் நாங்கள் அவரது அருட்காவலைப் பெற்று மகிழ்வோமாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.

Comments

Popular posts from this blog

புனித சூசையப்பர் மன்றாட்டு மாலை

நன்மரணத்துக்காகச் செபம்