Posts

Showing posts from July, 2021

புனித சூசையப்பர் மன்றாட்டு மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே இரக்கமாயிரும் ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாக கேட்டருளும் ***எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித மரியாவே, *** புனித சூசையப்பரே, தாவீது அரசரின் புகழ்பெற்ற மைந்தரே,  முதுபெரும் தந்தையரின் மகிமையே, இறையன்னையின் கணவரே, கன்னிமரியாவின் கற்புள்ள காவலரே, இறைமகனை வளர்த்த தந்தையே, கிறிஸ்துவை ஆர்வப்பற்றுதலுடன் காப்பாற்றினவரே. திருக்குடும்பத்தின் தலைவரே, உத்தம நீதிமானான புனித சூசையப்பரே, உத்தம துறவியான புனித சூசையப்பரே, உத்தம விவேகம் கொண்ட புனித சூசையப்பரே, உத்தம துணிவு கொண்டவரான புனித சூசையப்பரே, பொறுமையின் கண்ணாடியே,* வறுமையின் அன்பரே, தொழிலாளிகளுக்கு மாதிரிகையே, இல்லற வாழ்க்கையின் அணிகலனே, கன்னியர்களின் காவலரே, குடும்பங்களுக்கு ஆதரவே, துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலே நோயாளிகளுக்கு நம்பிக்கையே, இறப்பவர்களுக்குப் பாதுகாவலரே, பசாசுகளை நடுங்கச் செய்பவரே, புனிதத் திருச்சபையின் பரிபாலகரே, உலகின் பாவங்களைப் போக்குகிற  இறைவனின் செம்மறியே,  எங்கள் பாவங்களை போக்கியருளும். உலகின் பாவங்களைப் போக்க...

நன்மரணத்துக்காகச் செபம்

இறைவரங்களால் நிறைந்த புனித சூசையப்பரே, வாழ்க! ஆண்டவரும், ஆண்டவருடைய திரு அன்னையும் உம்முடனே, மனிதர்களுக்குள் ஆசீர்பெற்றவர் நீரே. உம்முடைய துணைவியின் கனியாகிய இயேசு ஆசீர் நிறைந்தவரே. கன்னித்தாயின் தூய கணவராகிய புனித சூசையப்பரே! உம்முடைய ஊழியரும் பிள்ளைகளுமாயிருக்கிற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். இயேசு கிறிஸ்து, கன்னி மரி இருவருடைய திருக்கைகளில் மரணத்தை அடைந்தவர் நீரே, எங்களுக்கு இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் உதவியாயிரும் - ஆமென்.

புனித சூசையப்பரின்ஏழு வியாகுலங்களையும் ஏழு மகிழ்ச்சிகளையும்குறித்துக் கேட்கும் மன்றாட்டு

1. புனித சூசையப்பரே! நீர் கன்னிமரியாவின் தாய்மைக்குத் காரணமறியாமல் பட்ட துரயத்தைப் பற்றி மனமிரங்குகிறேன். மேலும் காரணத்தை வானத்தூதரினால் அறிந்து நீர் அனுபவித்த மகிழ்ச்சியைப் பற்றிக் களிகூருகிறேன். புனித சூசையப்பரே! நீர் அனுபவித்த இந்தத் துயரத்தையும், மகிழ்ச்சியையும் பார்த்து எங்களுக்காகப் பரிந்துரைத்தருளும். (அல்லது தனக்கு வேண்டியதைக் கேட்கிறது). - பர. அருள். திரி.  2. புனித சூசையப்பரே! இயேசு மாட்டுக் கொட்டிலிற் பிறந்ததைக் கண்டு நீர் பட்ட துயரத்தைப் பற்றி மனமிரங்குகிறேன். மேலும் அவர் வானத்தூதர்களாலும் மனிதர்களாலும் தொழப்பட்டதைக் கண்டு நீர் அனுபவித்த மகிழ்ச்சியைப் பற்றிக் களிகூருகிறேன். புனித சூசையப்பரே! நீர்.......       - பர, அருள்., திரி.   3. புனித சூசையப்பரே! திவ்விய குழந்தை விருத்தசேதனம் பெற்றதைக் கண்டு நீர் பட்ட துயரத்தைப்பற்றி மனமிரங்குகிறேன். மேலும் அவருக்கு இயேசுவென்னும் திருப்பெயர் அளிக்கப்பட்டதைக் கண்டு நீர் அனுபவித்த மகிழ்ச்சியைப் பற்றிக் களிகூருகிறேன். புனித சூசையப்பரே! நீர்...... பர., அருள், திரி. 4. புனித சூசையப்பரே! திவ்விய மைந்தனுடைய ப...

புனித சூசையப்பரைக் குறித்து மன்றாட்டு

தயைமிகுந்த முதுபெரும் தந்தையாகிய புனித சூசையப்பரே! உம்மை மன்றாடி உம் அடைக்கலத்தைத் தேடி உம்மிடத்தில் தாம் இரந்து கேட்டதை அடையாமற் போனதில்லை என்று புனித தெரேசம்மாள் உறுதியாகக் கூறியதை நினைத்தருளும். என் அன்புள்ள தந்தையே! இத்தகைய நம்பிக்கையால் ஏவப்பட்டு, நான் உம்முடைய திருவடியை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்து அழுது பாவியாயிருக்கிற நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது திருமுன் பணிகிறேன். மிகவும் இரக்கமுள்ள புனித சூசையப்பரே! என் மன்றாட்டைப் புறக்கணியாமல் கருணையோடு கேட்டுப் பெற்றுத் தந்தருளும். -ஆமென்.

புனித சூசையப்பர் நவநாள் செபம்

புனித சூசையப்பரைக் குறித்து செபம் (New Version) மிகவும் பேறு பெற்ற புனித சூசையப்பரே! எங்களுடைய துன்ப வேளையில் உமது புனித துணைவியின் உதவியை இரந்து மன்றாடின பின், உமது பாதுகாவலையும் நம்பிக்கையோடு தேடி வருகிறோம். இறையன்னையும் அமலோற்பவியுமான புனித கன்னிமரியாவிடம் உமக்குள்ள அன்பைக் குறித்தும், திவ்விய குழந்தை இயேசுநாதருக்கு நீர் காண்பித்த தந்தையின் அன்பைக் குறித்தும், உம்மிடத்தில் நாங்கள் கேட்கும் மன்றாட்டு ஏதென்றால், இயேசு கிறிஸ்து தமது விலைமதியா இரத்தத்தால் ஈட்டிய உரிமையைக் கருணையுடன் பார்க்கவும் எங்கள் துன்பத்திலே உமது பலமுள்ள உதவியால் துணையாயிருக்கவும் மன்றாடுகிறோம். ஓ! திவ்விய குடும்பத்தை உத்தம ஞானத்தோடு நடத்தி இயேசுவை வளர்த்த தந்தையே! இயேசு கிறிஸ்து தம்முடையவர்களாகத் தெரிந்து கொண்ட மக்களைப் பராமரித்தருளும். ஓ ! மிகவும் அன்பு நிறைந்த எங்கள் தந்தையே! நாங்கள் எவ்வித தவற்றிலும் கேட்டிலும் விழாதபடி எங்களைக் காப்பாற்றும் ஓ! எங்களைப் பாதுகாத்தருளும்படி மேலான வல்லமையுள்ளவரே, எங்கள் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலே கருணையுடன் எங்களுக்குத் துணையாய் நிற்பீராக. திவ்விய பாலகன் முன்னாள் சாவின் ஆபத்த...