புனித சூசையப்பர் நவநாள் செபம்
புனித சூசையப்பரைக் குறித்து செபம் (New Version)
மிகவும் பேறு பெற்ற புனித சூசையப்பரே! எங்களுடைய துன்ப வேளையில் உமது புனித துணைவியின் உதவியை இரந்து மன்றாடின பின், உமது பாதுகாவலையும் நம்பிக்கையோடு தேடி வருகிறோம். இறையன்னையும் அமலோற்பவியுமான புனித கன்னிமரியாவிடம் உமக்குள்ள அன்பைக் குறித்தும், திவ்விய குழந்தை இயேசுநாதருக்கு நீர் காண்பித்த தந்தையின் அன்பைக் குறித்தும், உம்மிடத்தில் நாங்கள் கேட்கும் மன்றாட்டு ஏதென்றால், இயேசு கிறிஸ்து தமது விலைமதியா இரத்தத்தால் ஈட்டிய உரிமையைக் கருணையுடன் பார்க்கவும் எங்கள் துன்பத்திலே உமது பலமுள்ள உதவியால் துணையாயிருக்கவும் மன்றாடுகிறோம்.
ஓ! திவ்விய குடும்பத்தை உத்தம ஞானத்தோடு நடத்தி இயேசுவை வளர்த்த தந்தையே! இயேசு கிறிஸ்து தம்முடையவர்களாகத் தெரிந்து கொண்ட மக்களைப் பராமரித்தருளும். ஓ ! மிகவும் அன்பு நிறைந்த எங்கள் தந்தையே! நாங்கள் எவ்வித தவற்றிலும் கேட்டிலும் விழாதபடி எங்களைக் காப்பாற்றும்
ஓ! எங்களைப் பாதுகாத்தருளும்படி மேலான வல்லமையுள்ளவரே, எங்கள் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலே கருணையுடன் எங்களுக்குத் துணையாய் நிற்பீராக. திவ்விய பாலகன் முன்னாள் சாவின் ஆபத்துக்குத் தப்பித்துக் கொள்ளும்படி நீர் எவ்விதம் ஏதுவாயிருந்தீரோ, அவ்விதமே திருச்சபையையும் எல்லா ஆபத்திலுமிருந்து பாதுகாத்தருளும். உமது பாதுகாவல் இடைவிடாமல் என்றும்
இருக்கக் கடவது. உமது புண்ணிய மாதிரிகையாலும், உம்முடைய உதவியின் துணையாலும், நாங்கள் எல்லோரும் புனிதராய் வாழ்ந்து, பத்தியாய் இறந்து விண்ணுலகில் முடிவில்லாப் பேறு பெற்று வாழும்படி கருணைபுரிய உம்மை மன்றாடுகிறோம்.-ஆமென்.
Comments
Post a Comment